தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை மந்ராவா இது..? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


90களில் கிட்டத்தட்ட முக்கிய பிரபலங்களுடன் நடித்தவர் நடிகை மந்த்ரா, இவர் அஜித், விஜய் உட்பட அனைத்து நடிகர்களுடன் நடித்து அப்போது உச்சத்தில் இருந்தவர். இவர் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 11 படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு, மலையாளம் உட்பட தென்னிந்திய மொழிகளில் அனைத்திலும் நடித்துள்ளார்.

இவர் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் ராசி. 1986ல் ‘மமடால கோவேலு’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்.

சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் காட்டிய இவர் பல மேடை நிகழ்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார் . அதன் பின்னர் 1988ஆம் ஆண்டு எல்லாமே என் தங்கச்சி என்ற படத்தில் தமிழில் அறிமுகம் ஆனார். மேலும் இவர் தனது வசீகரமான முகத்தாலும் திறமையான நட்டிப்பினாலும் நல்ல இடத்தை பிடித்தார்.

மேலும் இவர் இப்பொழுது மிகவும் பிரபலமாக இருக்கும் விஜய் அஜீத்துடனும் அப்போதே நடித்து ஒரு வலம் வந்தவர்.விஜயுடன் லவ் டுடே, அஜித்துடன் ரெட்ட ஜட வயசு, அருண் விஜயுடன் கங்கா கௌரி, பிரியம், விஜயகாந்த்துடன் சிம்மாசனம், சத்யராஜுடன் கல்யாண கலாட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கிட்டதட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் . தற்போது 37 வயதாகும் அவர் எஸ்.எஸ் நிவாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணதிற்கு பின் பெரிதாக இவர் படங்களில் நடிக்கவில்லை. இவர் தமிழில் தமிழில் கடைசியாக சிம்பு நடிப்பில் வெளிவந்த வாழு படத்தில் நடித்தார். மேலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரது உடல் பருமன் அதிகரித்தால் தமிழ் ரசிகர்கள் இவரா அவர் என்று ஆச்சர்யபட்டு வருகின்றனர். மேலும் இவர் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார் .ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்புகிறாராம் மந்த்ரா. இதுதொடர்பாக கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை அவர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!