எனக்கும் அது நடந்திருக்கு.. மும்தாஜ் சொன்ன தகவலால் ஷாக்கான ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த மும்தாஜ் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் .இவரை பற்றி அறியாத சில பக்கங்கள் இதோ , 1980 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவரது உண்மையான பெயர் நக்மா கான். மொடலிங் செய்து வந்த இவர், டி.ராஜேந்தர் இயக்கத்தில் மோனிஷா என் மோனாலிஷா என்ற படத்தில் அறிமுகமானார்.இந்த திரைப்படத்திற்கு பிறகு தனது பெயரை மும்தாஜ் என மாற்றிக்கொண்டார். குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பிரபலமானார்.

2007 ஆம் ஆண்டு தனது குருநாதர் என கூறிக்கொள்ளும் டி.ராஜேந்தரின் வீராச்சாமி படத்தில் நடித்தார். அதன்பிறகு உடல் எடை அதிகரித்த காரணத்தால் அதிகமாக திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின்னர் பட வாய்ப்புகள் பெரியதாக வராது என்பதை அறிந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறங்கினார், இந்நிலையில்


பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்கள் பற்றி இப்போது நிறைய விஷயங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வருவது தான் மக்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.இந்த பாலியல் தொல்லைகள் குறித்து மும்தாஜ் ஒரு பேட்டியில், என்னிடம் சிலர் இப்படி அணுகியிருக்கிறார்கள். ஒரு இயக்குனரை நான் செருப்பால் அடித்து வெளுத்திருக்கிறேன்.

மற்றொருவர் வெளியே சூட்டிங் சென்றால் போர் அடிக்கும் என சூசகமாக கூறினார், நான் உடனே சிரித்து உங்களுக்கு பிடித்தது போல் யாராவது வருகிறார்கள் என்றால் அவர்களை இதில் கமிட் செய்யுங்கள் என்றேன். இன்னொரு சம்பவத்தில் ஒருவரை கண்டபடி நான் திட்டியிருக்கிறேன் என அவர் பேசியுள்ளார்.ஆனால் அவர்கள் யார் யார் என்ற விவரத்தை மும்தாஜ் பதிவு செய்யவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!