மீண்டும் கமலுக்கு எதிராக நடிகை கெளதமி எடுத்த அதிர்ச்சி முடிவு..!! என்ன தெரியுமா..?


உலகநாயகன் கமல் ஹாசன், ஒரு பக்கம் பிக்பாஸ் ஷூட்டிங், மறு பக்கம் திரைப்படம் என மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருந்தாலும், தான் புதிதாக ஆரம்பித்திருக்கும் கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் பணிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

அடுத்த வருடம் நடக்கவுள்ள நாடளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவுள்ளது என்பதையும் சூசகமாக அவ்வப்போது தெரிவித்து வரும் கமல், கட்சியின் உள்ளமைப்பை மிகவும் வலுவாக கட்டமைத்து வருவதாகவும் கூறப்படுகிது.

கமலுக்கு எதிராக கெளதமி கட்சி
இந்நிலையில், 10 வருடங்களுக்கு மேல், கமல்ஹாசனுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து, பின் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து, தன்னுடைய மகளுடன் வாழ்ந்து வரும் நடிகை கௌதமி, கமல்ஹாசனுக்கு எதிராக பிரபல கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கெளதமி அமைதி
இதனால் கமல் ரசிகர்கள் பலர் கௌதமியிடம் ‘நீங்கள் கமலுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளீர்களா? என சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்’. ஆனால் இதுவரை இந்த கேள்விக்கு கௌதமியின் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.