‘இப்படிதான் இருக்குமா பெண் சுதந்திரம்’..? அதிரடியாக களமிறங்கிய ‘லக்‌ஷ்மி’ குறுந்திரைப்படம்…!!!


சர்ஜுன் இயக்கத்தில் வெளியான ‘லக்ஷ்மி’ குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் குறும்படம் கௌதம் வாசுதேவ் மேனனின் ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ யூ-ட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது.

மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சர்ஜுன் இயக்கிய இந்தப் படத்தில் லக்ஷ்மி ப்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் மீதான விமர்சனங்களால் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

பெண் சுதந்திரம் பற்றிப் பேசுவதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அபத்தமான காட்சிகள் இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

லக்ஷ்மி படம்
பாரதியார் வரிகள்


பாரதியாரின் வரிகள் இந்தக் குறும்படத்தில் முக்கியமான கருத்துப் பதிவுக்காகப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தக் குறும்படத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பல மீம்களும் உலவி வருகின்றன.

பெண்ணியம்
பெண் சுதந்திரம்

பெண்களுக்கான வெளி பற்றியும், பெண் சுதந்திரம் பற்றியும் இந்தப் படத்தில் இடம்பெறும் காட்சிகள் தவறான புரிதலையும் விளைவுகளையும் ஏற்படுத்தும் எனப் பலர் வாதிடுகிறார்கள். இன்னும் பலர் இந்தக் குறும்படத்தை ஆகச்சிறந்த படைப்பு எனக் கொண்டாடி வருகிறார்கள்.


ஒளிப்பதிவு
நடிப்பு

படத்தில் நடித்திருக்கும் வெகுசிலரின் நடிப்பு பெரும்பாலானோரால் பாராட்டப்பட்டது. கதைக்கு ஏற்றாற்போல கருப்பு வெள்ளை, கலர் என மாற்றி ஒளிப்பதிவில் அசத்தியிருக்கிறார்கள். ஆனாலும் கருத்தியல் ரீதியாக கடும் எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது ‘லக்ஷ்மி’ குறும்படம்.

விமர்சனம்
எதிர்மறை விமர்சனங்கள்

சமூக வலைதள யுகத்தில் ஒரு திரைப்படம் வெற்றிப்படமாவதற்கு பல தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது. எதிர்மறை விமர்சனங்களால் பெட்டிப்பாம்பாக ஒன்றுமில்லாமல் அடங்கிய படங்கள் ஏராளம். அந்த வகையில், தற்போது குறும்படங்களும் அதிக கவனிப்புக்குள்ளாகின்றன.


படைப்புக்கு வழி
குறும்படங்களுக்கும் வரவேற்பு

படைப்பின் மீதான விமர்சனமே அந்தத் தளத்தில் இயங்கும் மற்ற படைப்பாளிகளை செம்மையுறச் செய்யும். அந்த விதத்தில் இந்தக் குறும்படம் நிறைய வழிகளைத் திறந்துவிட்டுள்ளதை வரவேற்கலாம். ஒருநாள் போட்டிகளுக்கு மத்தியில் டி-20 மேட்ச்களைப் போன்று சினிமாவுக்கு மத்தியில் நல்ல கதையம்சம் கொண்ட குறும்படங்களும் வரவேற்கப்பட்டுத்தான் வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!