காசுக்காக இப்படியா செய்வது? நடிகை பிரியா வாரியரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

கண்சிமிட்டல் வீடியோ ஒரே நாளில் வைரலானதால் இந்தியா முழுவதும் வைரலானவர் நடிகை பிரியா வாரியர். ஆனால் அவர் நடித்த ஒரு அடார் லவ் படம் மிக மோசமான தோல்வி அடைந்தது. மேலும் பிரியா வாரியருக்கும் எந்த பெரிய பட வாய்ப்பு வரவில்லை.

இந்நிலையில் விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதித்து வருகிறார் பிரியா வாரியர். மேலும் இன்ஸ்டாகிராமில் அவருக்கு 68 லட்சம் ரசிகர்கள் இருப்பதால் அதை வைத்தும் விளம்பரம் செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்.

Gepostet von Priya Varrier am Dienstag, 9. April 2019

அப்படி ஒரு விளம்பர புகைப்படத்தை பதிவிடும்போது பிரியா வாரியர் அந்த நிறுவனம் அனுப்பிய இ-மெயிலை அப்படியே எடுத்து பதிவிட்டுள்ளார். ”Text Content for Instagram and Facebook” என தலைப்பிட்டு அவர்கள் அனுப்பியதை சேர்த்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவிட்டார் .

அதற்காக பிரியா வாரியரை தற்போது நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.