பிரபல இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்..? மணப்பெண் யார் தெரியுமா..?


சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலா பால் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால் அவர்கள் திருமணம் ஆன இரண்டு வருடத்திற்குள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். நம்பிக்கை, நேர்மை இல்லாமல் போனது தான் காரணம் என விஜய் குற்றம் சாட்டினார்.

தற்போது அமலா பால் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இயக்குனர் விஜய்யும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது AL விஜய் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. அவருக்காக பெற்றோர் தீவிரமாக பெண் தேடி வருகிறார்களாம். விரைவில் திருமண அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!