காலா படத்தின் நான்காவது நாள் வசூலால் இப்படியொரு நிலைமையா..? குழப்பத்தில் ரசிகர்கள்..!!


சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான காலா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் அந்த அளவுக்கு ஒன்றும் பெரிதாக செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ரஜினியின் கோட்டை என்று கூறப்படும் மலேசியாவில் தாறுமாறாக அடிவாங்கியுள்ளது காலா திரைப்படம். கபாலி திரைப்படம் மலேசியாவில் மட்டும் 10 கோடி வசூல் செய்தது. ஆனால், காலா படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன பிறகும் வெறும் 1.7 கோடி தான் வசூல் செய்துள்ளது.

இது காலா படத்திற்கு விழுந்த தர்ம அடி என்று கூறுகிறார்கள். மேலும், இந்த மாதம் ரமலான் மாதம் என்பதால் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான மலேசியாவில் பெரும்பாலான முஸ்லீம்கள் திரையரங்கிற்கு வரவில்லை என்றும் இதனால் தான் வசூல் அடி வாங்கிவிட்டது என்று ஒரு தரப்பு கூறுகிறது.

ஆனாலும், முந்தைய படத்திற்கும் இப்போதைய படத்திற்கும் 80% வசூல் எப்படி பாதித்தது என்று புரியாமல் குழப்பத்தில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!