தளபதி விஜய்க்கு இந்த ஒரே ஒரு படத்தை ரீமேக் செய்ய ஆசையாம்.. எந்த படம் தெரியுமா?

தளபதி விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் முதன்மையாக திகழ்ந்து வரும் நடிகர்.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் கூட பல 100 கோடி படங்களை கொடுத்து தற்போது நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பிகில். இப்படம் வசூலில் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளிப்போய் வுள்ளது.

தளபதி விஜய் பல ரீமேக் படங்களில் நடித்துள்ளார், ஏன் ரீமேக் படங்களான கில்லி மற்றும் போக்கிரி படங்கள் தான் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இந்நிலையில் தளபதி விஜய்க்கு சத்யராஜ் நடித்து மணிவண்ணன் இயக்கி வெளிவந்த அமைதிப்படை படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று ஆசையாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!