விழா மேடையில் பிரபல நடிகையிடம் காதலை வெளிப்படுத்திய துல்கர் சல்மான்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


பிரபல தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்துக் கொண்டனர். சிறந்த நடிகை மற்றும் ஃபேவரிட் நடிகைக்கான பிரிவுகளில் நடிகை நயன்தாராவுக்கு விருது கிடைத்தது.

கடந்த வருடம் அவர் நடித்த அறம் படம் நயனுக்கு பல விருதுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. தற்போது அந்த வரிசையில் மேலும் 2 விருதுகள் கிடைத்திருக்கின்றன.


சமீபத்தில் வெளியான நடிகையர் திலகம் படத்தில் நடித்த துல்கர் சல்மானும் அந்த விழாவுக்கு வந்திருந்தார். இந்த அழகான ஹீரோயினிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்வி துல்கரிடம் கேட்கப் பட்டது. ‘எனக்கு அட்லி இயக்கிய ராஜா ராணி படம் மிகவும் பிடிக்கும்.

அதில் ஜெய் கூறும் வசனத்தை தான் எப்போதும் நயன்தாராவிடம் சொல்ல விரும்புவேன். ஐ லவ் யூ நயன்தாரா, உங்களுடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பல வருடங்களாக உங்களுடைய தீவிர விசிறி நான், உங்களுக்கு மட்டும் வயது பின்னோக்கி செல்கிறது’ எனக் கூறினார் துல்கர் சல்மான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!