லாஸ்லியாவால் முடிவுக்கு வந்த நட்பு? கண் கலங்கிய சாண்டி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்று 79-வது நாள். ப்ரீஸ் டாஸ்க் நடக்க உள்ளது.

முதல் ப்ரோமோ வீடியோவில் முகேனின் அம்மாவும் தங்கையும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர். இதனையடுத்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் சாண்டி லாஸ்லியாவை விளையாட்டாக கிண்டலடிக்க அவர் கோவித்து கொண்டு அந்த இடத்தில் இருந்து எழுந்து சென்று விடுகிறார்.
இதனையடுத்து கவின் நீ ஜாலி ஜாலின்னு சொல்லிட்டு அவளை காயப்படுத்துற என கூற சாண்டியின் முகம் சுருங்கி கண் கலங்கி விடுகிறது.

கவினின் இந்த வார்த்தையால் சாண்டி லாஸ்லியாவிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருப்பதற்காக வாய்ப்பும் உள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.