இயக்குனர் தாடியுடன் திரிவதற்கு இந்த பிரச்சனைதான் காரணமா..? குழப்பத்தில் ரசிகர்கள்..!!


இயக்குனர் மோகன்ராஜா சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் படத்தை எடுத்தார். அந்த படத்தை எடுத்ததில் இருந்து அவர் சால்ட் அன்ட் பெப்பர் தாடியுடன் சுற்றுகிறார். வேலைக்காரன் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் தாடியுடன் தான் கலந்து கொண்டார்.

தான் தாடியுடன் சுற்றுவதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் மோகன்ராஜா. படப்பிடிப்பு நாட்களில் நான் ஷேவ் பண்ண மாட்டேன். தாடி வளர்ந்தால் பரவாயில்லை என்று கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார் மோகன்ராஜா. படப்பிடிப்பு முடிந்த பிறகு கிளீன் ஷேவ் செய்துவிட்டு தான் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். தாடியுடன் சென்றால் நன்றாக இருக்காது என்பது என் எண்ணம் என்று மோகன்ராஜா கூறியுள்ளார்.


வேலைக்காரன் ஷூட்டிங் முடிந்து விளம்பர நிகழ்ச்சிகளுக்கு தயாரானபோது தாடியுடன் மீடியாவை சந்திக்குமாறு என் பிள்ளைகள் என்னிடம் கூறினார்கள் என்கிறார் மோகன்ராஜா.

நான் சால்ட் அன்ட் பெப்பர் தாடியுடன் இருப்பது நன்றாக உள்ளது என்று என் மகள் தெரிவித்தார். எனக்கு தாடி பொருத்தமாக உள்ளது என்று மகனும் கூறினார். அதனால் தாடியை மெயின்டெய்ன் செய்கிறேன் என்று மோகன்ராஜா தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி