எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர்தானாம்..!! கசிந்த ரகசிய தகவல்..!!


பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் ஆர்யா தான் திருமணம் செய்ய விரும்புவதாகவும், தன்னை விரும்பும் பெண்களை ஒரு இணையத்தில் பதிவிடுமாறு கூறினார்.

அதைப்போலவே நிறைய பெண்கள் அவர் கூறிய இணையத்தில் அவர்களின் முழு விவரங்களை பதிவுசெய்துள்ளார்கள். அதில் ஆர்யாவிற்கு பிடித்த 16 பெண்களை மட்டும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

அதிலிருந்த சில பெண்களை எலிமினேட் செய்து வருகிறார் ஆர்யா. தற்போது 6 பெண்கள் மிஞ்சியிருக்கும் நிலையில் இன்று ஒருவரை ஆர்யா எலிமினேட் செய்ய போகிறார்.

இந்த நிலையில், தமிழ் ரசிகர்களின் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் அபர்ணதி என்பதால், இவர் தான் ஆர்யாவிற்கு சரியான ஜோடி என்று பலரும் கூறி இவர்களுக்காக மீம்ஸ் செய்து பகிர்ந்து வருகிறார்கள். அதனால், அபர்ணதி இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி