நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் நடிகர் கவின் by priya | @ | August 21, 2023 9:55 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் கவின் ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான ‘லிஃப்ட்’, ‘டாடா’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இவர் தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.இந்நிலையில், நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்யப் போவதாகவும் இவர்களது திருமணம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இன்று அவர்களது திருமணம் நடந்துள்ளது.திரையுலக மற்றும் சின்னத்திரையுலக பிரபலங்கள் நடிகர் கவின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். காமெடி நடிகர் புகழ் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். ரசிகர்களும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கவின் – மோனிகா திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…