மேடு பள்ளங்களை கடந்து வந்துள்ளேன்- மாளவிகா மேனன்

‘விழா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மேனன். தொடர்ந்து பேய் மாமா, அருவா சண்ட, நிஜமா நிழலா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அவர் கூறியதாவது:- “பேய் மாமா படத்திற்கு பிறகு மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தேன். தமிழ் படங்களுக்காக நிறைய கதைகளை கேட்டேன். வித்தியா சமான கதைக்காக காத்திருக்கிறேன். கதாபாத்திரத்தில் எனக்கு ஒரு தனி இடம் வேண்டும்.

தற்போது நான் நடித்து வரும் திலிப் டி 148 1970 களில் நடந்த உண்மை சம்பவம் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக நான் நடித்துள்ள 13-ம் ராத்திரி ரிலீசுக்கு தயாராக உள்ளது. தமிழ் படங்களில் நடிப்பதற்கு என்று அதிக ஆசை எனக்கு உண்டு. 13-ம் ராத்திரி படம் நிறைய கதைகளை ஒன்றாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இதில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து சமாளித்து வெளியில் வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

நான் தைரியமான பெண். அதனால்தான் குருக்கன் படத்தில் ஜீப் ஓட்டுகிற காட்சிகளில் நான் தைரியமாக ஜீப் ஓட்டி சென்றேன். பெரிய கதாபாத்திரம், சின்ன கதாபாத்திரம் என்றில்லாமல் படத்துக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரத்தில் நடிக்க வேண்டும். சினிமாவில் நிறைய மேடு பள்ளங்களை கடந்து வந்துள்ளேன். என் கனவே சிறிய வயதில் இருந்து சினிமாவில் நடிப்பதுதான். எனது குடும்பத்தில் உள்ள பொருளாதார சூழ்நிலையை சினிமாதான் சரி செய்கிறது” என்று கூறினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!