பிரபல நடிகை ஒரு மணி நேரத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


நடிகைகள் என்றாலே படங்களில் நடிப்பது மட்டுமின்றி விளம்பரங்களில் நடிப்பது, பிராண்ட் அம்பாசிட்டராக இருப்பது, கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வது போன்ற பல நிகழ்சிகளில் கலந்து கொள்வது வழக்கமான ஒன்று.

அந்த வகையில், நடிகை சமந்தா, தமன்னா, திரிஷா, காஜல் ஆகர்வால் போன்ற முன்னணி நடிகைகள் அடிக்கடி கடை திறப்பு விழாக்களில் கலந்துகொள்வது வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் முன்னெல்லாம் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள கடைகளின் திறப்பு விழாக்களுக்கு மட்டுமே சென்று வந்தார்.


ஆனால், இப்போது அக்கடா, துக்கடா என சிறிய சிறிய மொபைல் கடைகளின் திறப்பு விழாக்களுக்கு கூட ஓ.கே சொல்லிவிடுகிறார்.

எந்த கடை திறப்பு விழா என்றாலும், கடை திறந்த நேரத்தில் இருந்து சரியாக ஒரு மணிநேரம் மட்டுமே அவர் அங்கு இருப்பார். அதன் பிறகு, கிளம்பி விடுவார். இந்த ஒரு மணி நேரத்திற்கு அவர் வாங்கும் தொகை 7 லட்சம்ரூபாய் ஆகும். மேலும், வந்து போகும் செலவு மற்றும் தங்கும் செலவுகளையும் கடையின் உரிமையாளரே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மாதத்திற்கு குறைந்தது, ஐந்து அல்லது ஆறு கடை திறப்பு விழாகளுக்காவது சென்றுவிடுகிறார் காஜல் அகர்வால்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி