உலக நாயகன் படத்தில் அறிமுகமான இந்த குட்டிப்பொண்ணு யார் தெரியுமா..? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் நல்ல நடிப்பின் மூலம் பெயர் எடுப்பது சாதாரண விஷயம்.உலக நாயகன் கமல் முதல் இன்றைய லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு வரை நிறைய பெரிய நடிகர்கள் இன்று குழந்தை நட்சத்திரமாக இருந்து பெரிய லெவலில் உள்ளனர்.அந்த வகையில் சிறு வயதிலிருந்தே நடிக்கதொடங்கி தற்போது ஒரு சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை பற்றிதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

1992இல் தமிழ் சினிமாவில் வெளியான சிவாஜி மற்றும் கமல் இனைந்து நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா.அந்த படத்தில் அழகான குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.அதுமுதல் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியிருந்தார்.


அதன் பின்பு ப்ரித்விராஜின் மொழி,லாரன்சின் ராஜாதி ராஜா,சந்தோஸ் சுப்பிரமணியம்,நான் மகான் அல்ல போன்ற பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார்.மேலும் நான் மகான் அல்ல படத்திற்காக சிறந்த குணசித்திர நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.

தற்போது அதிகபட்சமாக சீரியல்களில் நடித்து வரும் நீலிமா முதல்முறையாக தெலுங்கில் 1998இல் ஒளிபரப்பான இதி காது அதே சீரியலில் நடித்தார்.அதன் பின்னர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகலீல் பல சீரியல்களில் நடித்துள்ளார்.


15க்கும் மேற்பட்ட தமிழ் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் சீரியலில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது சன் டிவியில் வாணி ராணி மற்றும் ஜீ தமிழில் தலையணை பூக்கள் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி