அஜித் படத்தில் வில்லனாக இணையும் முன்னணி கதாநாயகன்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!


சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜீத் நடிக்கும் படம் விசுவாசம், இந்த கூட்டணி ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களில் பணியாற்றியுள்ளது. இது இவர்களின் நான்காவது படமாகும், இவர்களின் படத்திற்கு V என ஆரம்பிப்பது இவர்களின் நம்பிக்கையாக உள்ளது. அத்தனை கருத்தில் கொண்டு இந்த படத்திற்கு விசுவாசம் என பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமைய்யா உள்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் முக்கிய வேடத்தில் நடிக்க முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.


அது நடிகர் அர்ஜுன் தான் என தற்போது தெரியவந்துள்ளது. அவருக்கு வில்லன் வேடம் என கூறப்படுகிறது. ஏற்கனவே மங்காத்தா படத்திலும் அஜீத்துடன் அர்ஜுன் வில்லனாக நடித்திருக்கிறார். அதனால் விசுவாசம் படத்தில் நடிக்க அவர் கால்ஷீட் ஒதுக்குவார் என பட வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மங்காத்தாவில் கலக்கியது போல இந்த படத்திலும் இந்த கூட்டணி சக்கை போடு போடும் என அஜித்தின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி