பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி விஜய் டீ.வி யை விட்டு பிரிகின்றது..!! எதனால் தெரியுமா..?


ஆம், பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டீ.வி-யில் ஒளிபரப்பாகுமா.? என்ற சந்தேகம் வழுவாக எழுந்துள்ளது. தமிழ் தவிர மற்ற பிக்பாஸ் நிகழ்சிகள் அனைத்தையும் கலர்ஸ் தொலைகாட்சி நிறுவனம் தான் ஒளிபரப்பு செய்து வருகிறது.

சென்ற வருடம் கலர்ஸ் தமிழ் தொலைகாட்சி இல்லை. ஆனால், இந்த வருடம் தமிழுக்கென தனி சேனலை ஆரம்பித்து விட்டது கலர்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம். இதனால், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியும் இனி கலர்ஸ் சேனலில் தான் ஒளிபரப்பு செய்யப்படும் என்று பரவலாக பேசப்படுகிறது.


பிக்பாஸ் என்ற ஒற்றை நிகழ்ச்சியை வைத்து ஒட்டு மொத்த தமிழ் டீ.வி சேனல்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வந்த விஜய் டீ.வி கலர்ஸ் தமிழ் சேனல் வருகையால் சற்று ஆட்டம் கண்டு தான் உள்ளதாம்.

எப்படியாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் உரிமையை தாங்களே கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் வேலைகளை முடுக்கி விட்டுள்ளது விஜய் டீ.வி.

என்ன நடக்கப்போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி