விசாரணையில் சிக்கலான பதில்களை கூறிய போனி கபூர்..!! துபாய் போலீஸ் அதிரடி..!!


ஸ்ரீதேவி முதன்முதலாக கதாநாயகியாக நடித்த படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு . ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

பின்னர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரசித்து பெற்ற நாயகியானார்..

தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார்.


இவர் கடந்த சனிக்கிழமை அன்று குளிக்கும் தொட்டியில் மூழ்கி இறந்துள்ளார். இவருக்கு. திரை துறை பிரபலம் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்

திரைத்துறையில் நீங்கா இடம் பிடித்த இவருக்கு, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.ஊடகங்களும் ரசிகர்களும் இவரது மரணத்தில் பல சந்தேகங்களை கிளப்புகின்றனர்.

ஸ்ரீதேவியை மட்டும் துபாய் ஹோட்டல் அறையில் விட்டு விட்டு, போனி கபூர் ஏன், மும்பைக்குச் சென்றார்? மகளையும், கணவரையும் ஊருக்குச் சென்று விட்ட நிலையில், ஸ்ரீதேவிக்கு மட்டும் துபாயில் என்ன வேலை? இடையில் ஸ்ரீதேவி யாரையும் சந்தித்தாரா?


மும்பைக்குச் சென்ற போனி கபூர், சா்ப்ரைசாக, தேவிக்கும் தெரியாமல், திடீரென்று ஏன் திரும்பி துபாய்க்குப் போனார்? அவா் அங்கு சென்றிருந்த சமயம், ஸ்ரீதேவி ஏற்கனவே மது அருந்தியிருந்தாரா? ஸ்ரீதேவிக்கு இந்தப் பழக்கம் எத்தனை நாளாக இருக்கிறது?

நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூரிடம் துபாய் காவல்துறை அதிகாரிகள் விசாரணைய செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், இந்த விசாரணையை துபாய் காவல்துறை அதிகாரிகள் மேலும் தீவிரப்படுத்தி, Dubai Public Prosecution-க்கு மாற்றியுள்ளனர்.


போனி கபூர் அவ்வாறு முரணாக கூற காரணம்..?நடந்ததை அப்படியே கூறுவதில் ஏன் முரண் எழுகிறது..?

ஸ்ரீதேவி குடும்பத்தினர் அளித்த வாக்குமூலம் தெளிவாகவும் ஏற்றுக்கொள்ளும் படியாக அமைந்தால் மட்டுமே ஸ்ரீ தேவியின் உடலை உடனடியாக இந்தியா கொண்டு செல்ல முடியும் என்றும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தால் போனி கபூர் கைதாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது ஏன்..?

இவ்வாறு பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர் இவரது ரசிகர்கள்..

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி