மதயானைக் கூட்டம் புகழ் கதிருக்கு திருமணம்..!! மணமகள் யாருனு தெரியுமா..?


இசைஅமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தயாரிப்பில் மதயானைக் கூட்டம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தின் மூலமாக நல்ல ரீச் கிடைத்தது. அதன் பின்னர் ஹீரோவாக கிருமி நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் பரத்துடன் என்னோடு விளையாடு, விக்ரம் வேதா போன்ற படங்களில் தன் ரோலினை அழகாக செய்து நல்ல பெயர் எடுத்தார்.

இவர் நடிப்பில் சிகை, பரியேறும் பெருமாள் விரைவில் ரிலீசாக உள்ளது.


இந்நிலையில் கதிருக்கு ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் மகள் சஞ்சனாவுக்கும் இரு வீட்டார் ஏற்பாடு செய்ய திருமண நடக்க உள்ளது. மார்ச் 4 ஆம் தேதி ஈரோட்டில் இவர்கள் திருமணம் நடைபெறுவதாகவும், அதன்பின் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ப ரஞ்சித் தயாரிப்பில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் சிங்கிள் பாடல் கதிர் திருமணம் நாளான மார்ச் 4-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி