ஸ்ரீதேவி மாரடைப்பால் மட்டும் இறக்கவில்லை..!! பின்னணியில் அதிர்ச்சி காரணம்..!


ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்

கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார்.


கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

1996 அன்று ஸ்ரீதேவிக்கும், இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதியருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,இந்தி என பல மொழிகளில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ஸ்ரீதேவி.

சமீபத்தில் இவர் தனது கணவர் போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷி ஆகியோருடன் தனது உறவினரும் திரைப்பட நடிகருமான மோஹித் வர்மாவின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள துபாய் சென்றிருந்தார்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை இரவு சரியாக 11.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதுதான் அவரது கடைசி நிகழ்ச்சியாகும்.


இந்த நிலையில் இவரது மரணத்தில் ஏதோ சில விபரீதங்கள் நடந்துள்ளதாக கூறபடுகிறது

ஸ்ரீ தேவி மார்படைப்பினால் மட்டும் இறக்கவில்லை என்றும். அவர் தங்கியிருந்த விடுதியில் உள்ள பாத்ரூம்மில் வழுக்கி விழுந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன

அவர் விழுந்ததில் தான் குறைந்த ரத்த அழுத்தத்தால் மூளையில் கோளாறு ஏற்பட்டு மயக்கம் உண்டாகியிருக்கிறது. அதன் பிறகு ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு செல்லும் முன்னரே இறந்துள்ளார் என்று கூறபடுகிறது

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி