கல்லூரி மேடையில் அஜித் பற்றி இப்படியா சொன்னார்..? விஜய்யின் தாயினால் அதிர்ச்சி..!!


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய்யிக்கும் மிக பெரிய இடம் உண்டு. இவர் கடைசியாக நடித்த மெர்சல் படம் 100 நாட்களை கடந்து திரையில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, இவர் அடுத்து எ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதேபோலவே தான் நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளி.

இவர் விவேகம் படத்தை தொடர்ந்து, விசுவாசம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் விசுவாசம் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், விஜய் தாய் ஷோபா ஒரு கல்லூரி விழாவிற்காக சென்றபோது அங்குள்ளவர்கள், உங்களுக்கு அஜித்தை எவ்வளவு பிடிக்கும் என்று கேட்டார்கள்.

அதற்கு விஜயின் தாய், எனக்கு விஜய்யை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவிற்கு அஜித்தையும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். என்ன தான் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்கள் விஜய், அஜித் என்று சண்டை போட்டாலும், என்றைக்கும் விஜய்யும், அஜித்தும் எங்க பார்த்துக்கொண்டாலும் ஒன்றாக தான் இருக்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி