அரசியல் கட்சி துவங்கிய தமிழ் சினிமா நடிகர்கள்..!! என்ன ஆனார்கள் தெரியுமா..?


ஒரு வழியாக நடிகர் கமல்ஹாசன் களத்தில் இறங்கிவிட்டார். இதுவரையில் ட்விட்டரில் மட்டுமே காரசாரமான பதிவுகளை போட்டுவந்தவர் தற்போது மைக் பிடித்து முழக்கமிட ஆரம்பித்துவிட்டுகிறார்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து,பல்வேறு திடிர் திருப்பங்களை சந்தித்து வருகிறது. அடுத்த என்ன நிகழும் என்கிற எதிர்ப்பார்ப்பு ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டேயிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் இந்நிலையில் உலகநாயகனும் களத்தில் இறங்க சூடு பிடித்திருக்கிறது தமிழக அரசியல்.

கமலின் மக்கள் நீதி மய்யம் எப்படி செயல்படப்போகிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன்னால், இதற்கு முன் தமிழக அரசியலில் கால்பதிக்க நினைத்து புதிய கட்சி துவங்கிய திரைப்பிரபலங்களைப் பற்றிய தொகுப்பு.


எம்.ஜி.ஆர்.,

1940ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.,அதன் பின்னர் வந்த திமுக விலும் உறுப்பினராக சேர்ந்து கொண்டார். திமுகவின் தலைவரான அண்ணாவை தன்னுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டு திறம்பட வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.

அண்ணாவின் மரணத்தை தொடர்ந்து கருணாநிதி அந்த இடத்திற்கு வந்தார். தொடர்ந்து திமுக வின் பொருளாளராக இருந்த எம்ஜிஆர், திமுக கழகத்தினர் தங்களது சொத்துக் கணக்குகளை காட்ட வேண்டும் என்றார். இதனால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏக்கள் அவர் மீது நடவடிக்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.


அந்த புகாரையடுத்து திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 1972 அதே ஆண்டு தானே அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார்.

என்.டி.ராமராவ் :

நன்டமுரி தாரக ராமாராவ் என்பவர் தெலுங்கு திரைப்படத்தின் முன்னணி நடிகராக இருந்தார். மிகப்பெரிய செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர். இந்திய சிவில் சர்வீசில் வேலை கிடைத்தும் இவருடைய ஆர்வம் சினிமாவை நோக்கியே இருந்தது. முதலில் மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கியவர் 1947 ஆம் ஆண்டு வெளியான பல்லேடுரி பில்ல என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி முந்நூறுக்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.


தேசிய விருது, பத்ம விருது, ஃப்லிம்ஃபேர் விருது பத்துமுறை என சாதனை படைத்திருக்கிறார்.

இவர் 1982 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கினார்.மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. 1983 முதல் 1994 வரை மூன்று முறை முதலமைச்சரானார்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன் :

துவக்கத்தில் மேடை நாடகத்தில் நடித்து வந்த எஸ்.எஸ்.ஆர் பின்னணிப் பாடகராக திரையுலகில் அறிமுகமானார். படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நாடகத்தின் தொடர்பை விட்டுவிடாமல் நாடக சபா நடத்தினார். இந்த சபா மூலமாக தான் மனோரமா சினிமாவிற்கு வந்தார்.


சினிமா மட்டுமல்லாத சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்தார். இதைத் தாண்டி இயக்குநராகவும்,தயாரிப்பாளராகவும் தொடர்ந்து சினிமாவிற்கு பங்காற்றினார். 1962 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இருந்த எஸ் எஸ் ஆர் தேதி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கழகம் :

சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்பட நடிகர் எஸ் எஸ் ஆர் தான். அதன் பிறகு அதிமுகவில் இணைந்தார். 1980 ஆம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போது நடந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.


1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எஸ் எஸ் ஆருக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த எஸ் எஸ் ஆர் அதிமுகவிலிருந்து விலகி வெளியேறி, எம்.ஜி.ஆர் எஸ் எஸ் ஆர் கழகம் என்று கட்சியை துவங்கி சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பிறகு அதிமுக ஜா அணி, ஜெ அணி என இரண்டாக உடைந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஜானகி அணியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் சிவாஜி.


ஆனால் ராஜிவ் ஜெயலலிதா அணியை ஆதரிப்பதாக அறிவித்தது. இதனால் 1988 ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணியை தொடங்கினார்.

அந்த கட்சியை ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார். திருவையாறில் போட்டியிட்ட சிவாஜி தோற்றுப்போனார். அதோடு தன்னுடைய கட்சியை கலைத்துவிட்டு அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார் சிவாஜி.

ஆரம்பம் முதல் எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருந்தவர் அதிமுகவில் இருந்தார் பின்னர் அதிலிருந்து விலகி எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை 1989 ஆம் ஆண்டு துவங்கினார். அதற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காததை தொடர்ந்து கட்சியை கலைத்துவிட்டு திமுக கட்சியில் இணைந்து கொண்டார்.


தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,பாடகர் என பல திறமைகளை தன்னகத்தே வைத்துக்கொண்டிருக்கும் டி.ராஜேந்தர் திமுகவில் இணைந்தே தன்னுடைய அரசியல் பணியை துவக்கினார்.

திமுக வின் கொள்கையை பரப்புச் செயலாளராக இருந்தார் தொடர்ந்து தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராக இருந்தார். 2004 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அனைந்திந்திய லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என புதிய அரசியல் கட்சியை துவக்கினார். 2013 ஆம் ஆண்டு தன்னுடைய கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.

விருதுநகரில் பிறந்த விஜயகாந்த் சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் சென்னைக்கு வந்தார். தொடர்ந்து பல முயற்சிகளுக்கு 1978 ஆம் ஆண்டு சினிமாவில் கால் பதிக்க துவங்கினார்.


1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இவரது ரசிகர்கள் சுயேட்சியாக போட்டியிட்டனர். அதில் பலரும் வெற்றிப்பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து தானும் அரசியலிலும் ஈடுபடலாமென்று ஆர்வங்கொண்டு 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற கட்சியை துவக்கினார்.

தமிழ் சினிமாவின் வில்லனாக நடித்து வந்த சரத்குமார் சூரியன் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவானார். 1996 ஆம் ஆண்டு திமுக வில் இணைந்திருந்தார், 1998 ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.


2002 ஆம் ஆண்டு திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரானார். அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி மனைவி ராதிகாவுடன் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று சொல்லி ராதிகா கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து சரத்குமாரும் கட்சியிலிருந்து விலகிக் கொண்டார்.

இதன் பிறகு 2007 ஆம் ஆண்டு சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை துவக்கினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி