விளம்பரத்தில் நடித்த இந்த குட்டிபொண்ணா இப்படி ஆயிட்டாங்க..!! இப்ப என்ன செய்கிறார் தெரியுமா..?


நாம் தியேட்டரில் படம் மட்டும் தான் பார்க்கிறோமா..? சில நடிகர்களை காட்டிலும் நாம் தியேட்டர் மூலம் அறிந்த வேறு சிலர் நமக்கு மிகவும் பரிச்சயம் ஆகியுள்ளனர்.

உதாரணமாக ‘என் பேர் முகேஷ்.. எனக்கு குட்கா, புகையில எடுத்துக்கிற பழக்கம் இருந்துச்சு. இதனால எனக்கு வாய் புற்றுநோய் வந்திருக்கு. எனக்கு அறுவை சிகிச்சை பண்ணப் போறாங்க. இதுல எனக்கு பேச்சு வராம கூட போகலாம்.’ என்று கூறும் குட்கா முகேஷ். நோ ஸ்மோக்கிங் விளம்பரத்தில் நடித்த அந்த அப்பா, குழந்தை ஆகட்டும். இவர்கள் எல்லாம் நமது நினைவில் ஆழமாக பதிந்தவர்கள்.

காரணம், நாம் கண்ட பழமொழி படங்களில் கதாப்பாத்திரங்கள் மாறி இருந்தாலும், இந்த விளம்பரங்கள் மாறவில்லை. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இந்த விளம்பரங்கள் தான் திரைப்படத்திற்கு முன்னர் ஒளிபரப்பப்படும்.


இவர்களில் நாம் இன்று வரை சிறு குழந்தையாக கண்டு வரும் நோ ஸ்மோகிங் விளம்பர சிறுமி… இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? இன்னும் ஓரிரு வருடங்களை இவரை நாம் பாலிவுட் சினிமாக்களில் கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்தளவிற்கு வளர்ந்துவிட்டார் சிம்ரன்….

இந்த பெண்ணின் பெயர் சிம்ரன் நடேகர். ஆனால், இவரது இயற்பெயர் கூறினால் பலருக்கும் இவரை அடையாளம் தெரியாது. இதுவே, நோ ஸ்மோகிங் தியேட்டர் விளம்பரத்தில் நடித்த குழந்தை என்றால் பலருக்கும் இந்த சிறுமியின் முகம் தான் நினைவிற்கு வரும்

காரணம், எண்ணற்ற முறை நாம் இந்த சிறுமியை தியேட்டரில் கண்டுள்ளோம். இந்தியா முழுக்க திரையிடப்படும் அனைத்து படங்களுக்கு முன்னாலும் இந்த சிறுமியை நாம் பார்த்துள்ளோம். என் பேர் முகேஷ்… முகேஷிற்கு பிறகு, நாம் தியேட்டர் மூலம் அதிகம் அறிந்த பெண் இவர் தான்.


இன்று சிம்ரன் நடேகரை காணும் பலருக்கும் வாயடைத்து போகிறார்கள். அடடே! அந்த குழந்தையா? இந்த பொண்ணு. இப்படி வளர்ந்துடுச்சே என்று ஆச்சரியப்படுகிறார்கள். என்ன செய்ய. அந்த விளம்பரம் சரியாக பத்து வருடங்களுக்கு முன் இந்திய அமைச்சகத்தால் எடுக்கப்பட்டது. பத்து வருடங்களை நாம் கடந்து வந்துவிட்டோமே.

இவர் பெரியதாக படங்களில் எங்கும் நடிக்கவில்லை என்றாலும் கூட, இன்ஸ்டாகிராமில் இவர் ஒரு ஸ்டார் தான். இவரை இதுவரை 45 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இதுவரை சிம்ரன் 355 போஸ்டுகள் பதிவு செய்துள்ளார். இவர் 1100 பேரை பின்தொடர்ந்து வருகிறார். இவருக்கு இப்போது வயது 17.

நாம் தியேட்டரில் கண்ட நோ ஸ்மோக்கிங் விளம்பரத்தை தவிர, இவர் வீடியோகான், டாமினோஸ், கிளினிக் பிளஸ், பார்பி மற்றும் பல விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோக இவர் இந்தி சீரியல்களிலும் தோன்றி இருக்கிறார். 2014ல் வெளியான இந்தி படமான தாவத் ஏ இஷ்க் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார் சிம்ரன்.


சிம்ரன் மும்பையில் வசித்து வருகிறார். இவர் பிறந்த இடமே மும்பை தான். இவரது படங்கள் மும்பையை சேர்ந்த சமூக தள பக்கங்களில் அடிக்கடி பரவலாக பகிரப்படுவதை காண முடிகிறது. 7வயதில் நோ ஸ்மோகிங் விளம்பரத்தில் நடித்த சிம்ரன், அதற்குள் நடிகையாகி விட்டார் என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

நோ ஸ்மோக்கிங் விளம்பரத்தில் நடித்து நமது மனதில் ஆழமாக பதிந்த சிம்ரன் நடேகரின் சில லுக்ஸ்… நிச்சயம் இவர் இந்திய சினிமாவில் ஒரு நடிகையாக பெரிய ரவுண்டு வர வாய்ப்பிருக்கிறதா… என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே, டிவி சீரியல், திரைப்படத்தில் சிறிய வேடம் ஏற்று நடித்திருப்பதால்… நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!