நடிகை மனோரம்மாவின் வீட்டில் பரபரப்பு சம்பவம்..!! எதனால் தெரியுமா..?


மறைந்த நடிகை மனோரமாவின் இல்லத்தில் வைத்து பிரபல நடிகர் கார்த்தி நடித்துவரும் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துவரும் படத்தின் பெயர் தான் கடைக்குட்டி சிங்கம். இப்படத்தில் விவசாயி வேடத்தில் நடிக்கிறார் நடிகர் கார்த்தி.

மேலும் அவருக்கு ஜோடியாக வனமகன் சயிஷா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்

நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தான் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பழம்பெரும் நடிகையான மனோரமாவின் வீட்டில் வைத்து இன்று நடைபெறுகிறது.

சென்னை தி.நகரில் தான் மனோரமாவின் இல்லம் அமைந்துள்ளது. இன்றைய படப்பிடிப்பில், கார்த்தி கிடையாது. மற்ற நடிகர்கள் கலந்து கொள்ளும் காட்சியானது படமாக்கப்பட இருக்கிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!