பிரபல காமெடி நடிகர் ட்வீட் மூலம் விசுவாசம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!! செம்ம வைரல்..!!


படத்தின் அறிவிப்பு வந்த நாளிலேயே படத்தின் தலைப்பை வெளியிட்டு ஆச்சிர்யப்படுத்தினர் சத்யா ஜோதி பிலிம்ஸ். தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி என்பது மட்டுமே ஆரம்பத்தில் உறுதியானது. பின்னர் சில நாட்கள் கழித்து ஹீரோயினாக நயன்தாரா, இசை அமைப்பாளராக இமான் படத்தில் இணைந்தனர்.

தீபாவளி ரிலீஸ் என்பது முடிவாகியும் இன்னமும் ஷூட்டிங் செல்ல வில்லை இந்த டீம். படம் ப்ரீ – ப்ரோடுக்ஷன் ஸ்டேஜில் தான் உள்ளது.


இந்நிலையில் விசுவாசம் படத்தை பற்றிய புது அப்டேட் நேற்று வெளி வந்தது. விசுவாசம் படத்தில் காமெடி நடிகராக நடிக்க இருப்பது யோகி பாபு என்ற தகவல்.

இதனை உறுதி செய்யும் விதமாக யோகி பாபுவும் ” விசுவாசம் படத்தில் இணைவது மகிழிச்சியாக உள்ளது ” என்று டிவீட்டினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!