அஜித் தான் நம்பர் 1, விஜய் எல்லாம் அப்றம் தான், பிரபலத்தின் கருத்தால் ரசிகர்கள் மோதல்

தமிழ் சினிமாவில் மிக முக்கிய தூண்கள் என்றால் அது ரஜினி, கமல், விஜய், அஜித் தான்.

இவர்களின் ரசிகர்கள் இடையே ரஜினிக்கு நிகர் யார் என்று அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் கேள்விகள் வரும்.

இதனை குறித்து பலரும் பேட்டிகளில் தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள்.

அந்த வகையில் அமைச்சர் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகரான ராஜேந்திர பாலாஜி அவர்கள் பத்திரிகைகளை சந்தித்து பேசும் போழுது “தமிழ் திரையுலகில் எந்த ஒரு நடிகரும் ரஜினிக்கு நிகர் கிடையவே கிடையாது, ரஜினிக்கு நிகர் என்றால் அது நடிகர் அஜித் அவர்கள் மட்டும் தான். அவர்கள் இருவர் தான் ஜல்லிக்கட்டு காளைகள்” என்று வெளிப்படையாக கூறினார்.

மேலும் தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதோடு ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதோடு, விஜய்யின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குறிப்பிட்டு, அவர் தான் என்றும் நம்பர் 1, விஜய் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசுவதால், இப்படி சொல்கின்றனர் என ஒரு சில ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!