“நானே வருவேன்” தலைப்பு மாற்றப்படுகிறதா! அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில் வெளியாகும் திரைப்படங்கள் எப்போதுமே சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடையும்.

அந்த வகையில் 4வது முறையாக இவர்கள் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் தான் நானே வருவேன், இப்படத்தின் First லுக் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது நானே வருவேன் திரைப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தின் புதிய தலைப்பை படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 முதல் தொடங்குவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!