அரசியல் பயணத்தில் கமலுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்..!! வியப்பில் ரசிகர்கள்..!!


ராமேஸ்வரத்தில் இன்று கமல் ஹாஸன் தொடங்கிய அரசியல் பயணத்தில் தன்னையும் இணைத்துக் கொள்வதாக பிக் பாஸ் புகழ் கவிஞர் சினேகன் அறிவித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாஸன் அரசியல் களத்தில் குதித்துள்ளார். திரையுலகில் தனது போட்டியாளரான ரஜினிகாந்துக்கு முன் புதிய கட்சி தொடங்கி, ஆட்சியைப் பிடிப்பதிலும் முனைப்பாக உள்ளார்.

இன்று தனது புதிய அரசியல் கட்சியை மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் வைத்து அறிவிக்கப்போகிறார்.

அதற்கு முன்பாக மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

கமல் ஹாஸனின் இந்த அரசியல் பயணத்தில் தன்னையும் இணைத்துக் கொள்வதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். இதற்காக அவரும் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அப்துல் கலாம் வீட்டுக்கு கமல் ஹாஸன் சென்றபோது சினேகனும் உடன் சென்றார். மாலை மதுரையில் நடக்கும் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதாக சினேகன் அறிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!