வெளியாகிய திரைப்படங்களில் சூப்பர் ஹிட் திரைப்படம் எது தெரியுமா..? ரசிகர்கள் கருத்து..!!!


பொங்கலை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அதாவது 12-ம் தேதியே மூன்று படங்களும் வெளியாகின. ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் தெலுங்கில் ‘கேங்’ என்ற பெயரிலும் வெளியானது. அங்கும் ப்ரொமோஷன் நன்றாகவே நடைபெற்றது. விடுமுறை நாட்கள் என்பதால் முதல் நாளிலேயே எதிர்பார்த்த அளவிற்கு இந்த படங்களுக்கு வசூல் அமையவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.

அடுத்து சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் விடுமுறை என்பதால் பெரும்பாலான நகர்ப்புற தியேட்டர்களில் படத்திற்கு ஓரளவு அரங்கு நிறைந்துள்ளது. தானா சேர்ந்த கூட்டம் முந்துகிறது நகர்ப் புறங்களில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்குத்தான் மற்ற இரண்டு படங்களை விடவும் ஓரளவிற்கு கூட்டம் கூடியுள்ளது. மூன்று படங்களும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பதுதான் உண்மை.

குறை சொல்லும் ரசிகர்கள்


படம் பார்க்கும் ரசிகர்களும் படங்களைப் பற்றி குறையாகத்தான் சொல்லி வருகிறார்கள்.

இருந்தாலும் பொங்கல் விடுமுறையைக் கொண்டாட வேறு படங்கள் இல்லாததால் ரசிகர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்றபடி படங்களைப் பார்த்து வருகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் நான்கு நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. முதல் நாளில் ஏழேகால் வசூல் செய்த ‘TSK’ திங்கட்கிழமை வரை கிட்டத்தட்ட 35 கோடி தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்துள்ளது. பார்டரில் தப்பிக்கும் அவர்களின் விருப்பங்களில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ தான் முதலில் உள்ளது. தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால், படம் பற்றி பல்வேறு விதமாக விமர்சனம் வந்தாலும், வியாபார ரீதியாக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பார்டரில் தப்பிக்கும் எனக் கூறப்படுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி