மார்ச் 1ம் தேதி முதல் எந்த படமும் ரிலீஸ் ஆகாதா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


ஜிஎஸ்டி வரி மற்றும் உள்ளூர் கேளிக்கை வரியால் நஷ்டம், படத்தை திரையிடும் கியூப் மற்றும் யுஎப்ஓ கட்டணங்கள் அதிகரிப்பு, திருட்டு விசிடி மற்றும் இணைய தள பதிவேற்றங்களால்

வசூல் குறைவு என பல்வேறு பிரச்சினைகளை காரணம் காட்டி மார்ச் 1ம் தேதி முதல் 4 தென்னிந்திய சினிமா துறைகளும் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிரச்சினைகளை அரசு சரி செய்து தரும்வரை புதிய படங்களை தயாரிப்பதில்லை, வெளியிடுவதில்லை என்று தெலுங்கு திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவெடுத்து மற்ற சினிமா துறைகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்திலும் இது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாதுறையும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி