செய்தி சேனலால் அவமானப்பட்ட ‘சங்கமித்ரா’ ஹீரோயின்..!! என்ன செய்தார் தெரியுமா..?


பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க வரும் முன்பு வித்தியாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் முன்னணி செய்தி சேனல் ஒன்று அவரின் பழைய மற்றும் தற்போதைய புகைப்படங்களை ஒப்பிட்டுள்ளது. அந்த ஒப்பீடு செய்ததை ட்வீட்டியுள்ளது.

திஷா பள்ளியில் படித்தபோது எடுத்த புகைப்படத்துடன் தற்போதைய புகைப்படத்தை ஒப்பிட்டு திஷா பதானி ஒரு காலத்தில் எவ்வளவு அசிங்கமாக இருந்துள்ளார் என்று உங்களால் நம்ப முடிகிறதா என்று ட்வீட்டியுள்ளது அந்த செய்தி சேனல்.

செய்தி சேனலின் ட்வீட்டை பார்த்த திஷா பதானிக்கு கோபம் வந்துவிட்டது. இதையடுத்து அவர் செய்தி சேனலை விளாசி பதில் ட்வீட் போட்டுள்ளார்.


அந்த ட்வீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரேக்கிங் நியூஸ் நீங்கள் சொன்னது மிகவும் சரி. நான் 7ம் வகுப்பு படிக்கும்போது அழகான கவுன் அணிந்து, ஹேர்ஸ்டைல் செய்து, மேக்கப் போட்டுக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அசிங்கமான குழந்தையாக இருந்ததற்கு சாரி.

இதை விட நல்ல பிரேக்கிங் நியூஸ் கிடைக்கவில்லையா? என்று கேட்டுள்ளார் திஷா. சுந்தர் சி. இயக்கும் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவில் இளவரசியாக நடிக்க உள்ளார் திஷா பதானி. இந்த படத்தின் மூலம் அவர் கோலிவுட்டுக்கு வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி