முதல் நாள் முதல் ஷோவில் கோடிக்கணக்கில் வசூல் செய்த ரஜினியின் அண்ணாத்த..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா என திரையுலக பட்டாளமே நடித்துள்ளது.

மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு மற்றும் அபிமன்யு சிங் என மூன்று வில்லங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இன்று அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
இதில் வெளிநாடுகளில் முதல் நாள் முதல் ஷோவில் மட்டுமே சுமார் ரூ. 11 கோடி வசூல் செய்துள்ளதாம் அண்ணாத்த.

இதில் UK மற்றும் Europe நாடுகளை தவிர்த்து மற்ற வெளிநாடுகளில் மட்டுமே இவ்வளவு வசூல் செய்துள்ளதாம்.

இந்த சாதனை ரஜினிகாந்தால் மட்டுமே நிகழ்த்த முடியும் என்று ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!