சினிமாவில் நடிகர்களுக்கே டப்பிங் வாய்ஸ் பேசிய சக நடிகர்கள்..!! என்ன தாராள மனசு..!!


சினிமா என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதனை எடுத்து முடித்து ரிலீஸ் செய்வதற்குள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு உள்ளது. அப்படி சினிமாவில் டப்பிங்கும் ஒரு பிரிவுதான். டப்பிங் என்பது ஒரு கலை.

ஆரம்பத்தில் சில முன்னணி நடிகர்களுக்கு கூட வேறு ஒருவர் டப்பிங் கொடுத்துள்ளார்.


அதன்படி அஜித், அப்பாஸ், பிரபு தேவாவுக்கு கூட டப்பிங் வாய்ஸ்தான் பேசப்பட்டு உள்ளது.

அதே போல உச்ச நடிகர்களான ரஜினியும், கமலும் கூட பல மொழிகளில் சரளமாக பேச கூடியவர்கள். ஆனாலும் ரஜினிக்கு தெலுங்கில் மனோ மற்றும் சாய்குமார்தான் டப்பிங் கொடுப்பார்கள்.

அதே போல கமலுக்கு பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்து உள்ளார்.


மேலும் வெள்ளி விழா நாயகன் மோகனுக்கு பிரபல பாடகர் எஸ்.என் சுரேந்தர் டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

மேலும் தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தத்திற்கு எம்.எஸ்.பாஸ்கர் டப்பிங் கொடுப்பார். மனிஷா கொய்ராலா, ஐஸ்வர்யா ராய், ஜோதிகாவுக்கு நடிகை ரோகிணி டப்பிங் கொடுத்துள்ளார்.

நயன்தாரா, காஜோல், அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகளுக்கு தீபா வெங்கட் டப்பிங் பேசியுள்ளார். இது போல பல முன்னணி நடிகர்கள் இன்றளவும் பிற நடிகர்களுக்கு டப்பிங் பேசி வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி