எதையும் தெரிஞ்சா மட்டும் பேசுங்கள்..!! இல்லையென்றால் வாயை மூடிகிட்டு இருங்கள்..!! மைனா ஆவேசம்..!!


நடிகர்கள் சர்ச்சைகளில் சிக்குவது இப்போதெல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது. அப்படி கடந்த வருடம் பெரிய சர்ச்சையில் மாட்டியவர் தொலைக்காட்சி நடிகை மைனா என்கிற நந்தினி.

இவரது கணவர் ஒரு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு நந்தினி தான் காரணம், அவரால் தான் நந்தினி பிரபலமானார் என்பது போல் அவரது கணவரின் குடும்பம் பேட்டி கொடுத்திருந்தனர்.

இதற்கு முதன்முறையாக மைனா பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசும்போது, என் கணவரின் தங்கை அவரால் நான் பிரபலம் அடைந்தேன் என்பது போல் பேசியிருந்தார்.


ஆனால் உண்மை என்னால் தான் அவர் நிறைய பேருக்கு அடையாளம் தெரிந்தார், விஷயம் தெரிந்தால் பேசவேண்டும் இல்லையெனில் மூடிகிட்டு இருக்க வேண்டும்.

நான் உண்மையாக இருந்தேன், ஆனால் அவர் என்னுடைய முதல் மனைவி பக்கத்தில் என்னை புதையுங்கள் என்பது போல் கடிதம் எழுதியிருந்தார்.

அப்போது அவர் என்னிடம் உண்மையாக இல்லை என்பது அர்த்தம். எது பற்றியும் தெரியாமல் யாரும் பேச கூடாது என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி