அந்த தகுதி ஓவியாவிற்கு இல்லை – ஜூலி பேட்டி!!!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றவர் ஓவியா. அதே நிகழ்ச்சியில் அனைவராலும் வெறுக்கப்பட்டவர் ஜூலி.


பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில், அதில் பங்கேற்ற அனைவருக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அதிலும், ஓவியாவிற்கு கிடைக்கும் வரவேற்பு பெரிய ஹீரோயின்களுக்கே சவால் விடும் அளவிற்கு உள்ளது.


இந்நிலையில், ஜூலி ஒரு பேட்டியில், ஓவியாவிற்கு கிடைக்கும் புகழுக்கு அவர் தகுதியற்றவர். அவரது ரசிகர்களை அவர் மதிப்பதே இல்லை என்று கூறியுள்ளார்.


முன்னதாக, ஓவியா ஜூலியை யாரும் கிண்டல் செய்ய வேண்டாம் என்று ரசிகர்களிடம் கோரிக்கை செய்து வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!