ஜீவா நடிக்கும் இந்த திரைப்படம் இப்படியானதா..? வெளியாகியது ‘கீ’ ட்ரெய்லர்..!!


இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கீ’. இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக ‘காவியத்தலைவன்’ படத்தில் நடித்த அனைகா சோடி நடிக்கிறார்.

மேலும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார்.

வில்லனாக மலையாள நடிகர் பத்மசூர்யா நடிக்கிறார். மேலும், ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி