செம்ம ஹிட்டான இந்த திரைப்படங்களால் இவ்வளவு நஷ்டமா…!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!


அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழி கடந்த ஆண்டு ரிலீசான மெகா பட்ஜெட் படங்களுக்குதான் பொருந்தும். முந்நூறு கோடிகளில் பாகுபலி எடுப்பதைப் பார்த்து நம்ம ஹீரோக்களுக்கு 50 கோடிக்கு மேல் தங்கள் படத்தின் பட்ஜெட்டை ஏற்ற ஆசை வந்தது. அந்த விபரீத ஆசையால் விளைந்த விளைவுகளை பார்ப்போம்.

விவேகம்

ஏகப்பட்ட பில்டப்கள் தரப்பட்டு அந்த பில்டப்களாலேயே பல்பு வாங்கிய படம். முதல் காட்சியைப் பார்த்தாலே ஹாலிவுட் இயக்குநர்களே அலறுவார்கள். திரைக்கதை எழுதும்போது ஒவ்வொரு பக்கத்தின் மேலும் பிள்ளையார் சுழிக்கு பதிலாக தல துணை என்று தொடங்கி இருப்பார் போல சிவா. படம் முழுக்க தல புராணமாக இருந்தது தான் முக்கிய காரணம். கடைசியில் காஜல் முறைத்து பார்த்துக்கொண்டே பாடுவது இன்னுமாடா நீங்க கிளம்பலை? என்று கேட்டது போல இருந்ததாக தல ரசிகர்களே புலம்பினார்கள். இந்த படம் சுமார் 100 கோடியைத் தாண்டி விழுங்கியதாக கேள்வி. தல அடுத்து கால்ஷீட் தந்து எந்த பஞ்சாயத்தும் வராத மாதிரி பார்த்துக்கொண்டார்.


மெர்சல்

ஃப்ரீமேக்கிங் இயக்குநர் அட்லீ அபூர்வ சகோதரர்களையும் மூன்று முகம் படத்தையும் மிக்ஸியில் அடித்து எடுத்த படம். விஜய் எப்படி இப்படி ஒரு கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற வியப்பு ஏற்பட்டது. ஆனால் ஜிஎஸ்டி பற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு வசனத்தால் ஆல் இண்டியா ட்ரெண்ட் அடித்து பரபரப்பானது. ஆனாலும் கூட நஷ்டம் என்கிறார்கள். பட்ஜெட் 130 ஐத் தாண்டி எகிறியது தான் காரணம்.

மெர்சல் போலத்தான் வேலைக்காரனும். நல்ல மெசேஜ். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி இல்லை. நான்கு மணி நேரத்திற்கு மேல் படம் எடுத்து அதனை குறைத்ததால் ஏற்பட்ட விளைவுகள் படத்தில் தெரிந்தன. ஸ்க்ரிப்டின்போதே எடிட்டிங்கை கனகச்சிதமாக முடித்திருந்தால் பெர்ஃபக்ட் படமாக கிடைத்திருக்கும். இன்னும் நஷ்டக் கணக்கு வரவில்லை. ஆனால் வரும் என்கிறார்கள்.


ஸ்பைடர்

அக்கட தேசத்து சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தமிழ் ஆசையில் ஒரேயடியாக மண்ணை அள்ளிப் போட்டார் முருகதாஸ். லாஜிக்கே இல்லாமல் மக்களை நெளிய வைத்தது படம். எஸ்ஜே சூர்யாவின் வில்லத்தனத்தையும் வீணடித்திருந்தார்கள். பட்ஜெட்டில் 50 கோடியைத் தாண்டிய படங்கள் எல்லாம் காலை வாரிய நிலையில் சில கோடிகளில் எடுக்கப்பட்ட படங்கள்தான் தமிழ் சினிமாவை 2017ல் ஆண்டன. படத்துக்கு பட்ஜெட் முக்கியமல்ல. கதைதான் முக்கியம்!

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி