விஜய்க்கு வந்த சோதனையை பார்த்தீங்களா…? ரசிகர்கள் என்ன செய்ய போறாங்கனு தெரியுமா…?


கடந்த ஆண்டு ‘மெர்சல்’ படத்தின் அரசியல் வசனங்களின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றார் நடிகர் விஜய். இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கான நாமினேஷன் லிஸ்டில் மெர்சல் படத்திற்காக விஜய் இடம் பெற்றுள்ளார்.

அட்லீ இயக்கிய ‘மெர்சல்’ திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான பிரிவில் இந்த நாமினேஷனில் இடம் பிடித்துள்ளது.

தேசிய திரைப்பட அகாடமி விருது ஐரோப்பாவில் நடைபெறவுள்ள சர்வதேச விழாவுக்கான அறிவிப்புகள் அண்மையில் வெளியானது. விஜய்யின் மெர்சல் படம் சர்வதேச அளவில் சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


இந்தத் தகவலை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டரில் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறந்த துணை நடிகர் விருது இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கு மெர்சல் படத்திற்காக விஜய் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

விருது பெற்றவர்களின் விவரம் மார்ச் மாதம் 28-ம் தேதி நடைபெற உள்ள தேசிய திரைப்பட விருதுகள் 2018 விழாவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆன்லைன் வாக்குப்பதிவு இதனை விஜய் ரசிகர்கள் மிகவும் கொண்டாடினர்.


விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இந்தத் தகவலைப் பகிரத் தொடங்கினர். போட்டியாளர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்குப்பதிவு சமீபத்தில் ஆரம்பமானது.

வெப்சைட்டில் வைரஸ் ரசிகர்கள் பலரும் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அந்த தளத்தை வைரஸ் தாக்கியுள்ளதாம். இதனால் அதில் வாக்களிக்க வருவோருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி