இந்தியன் 3 திரைப்படத்தை உருவாக்க ஷங்கர் போடும் புதிய திட்டம்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன்-2’. இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘இந்தியன்-2’ படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு காட்சிகளை இயக்குனர் ஷங்கர் பார்த்திருக்கிறார். இதில் 6 மணி நேரத்துக்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 3 மணி நேர காட்சிகளை கட் செய்வதைவிட, படத்தின் இன்னொரு பாகமாக அதை உருவாக்கலாமா? என்று ஷங்கர் யோசித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ‘இந்தியன்-3’ படத்தை உருவாக்கி விடும் யோசனையில் ஷங்கர் இருப்பதாக கூறப்படுகிறது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!