படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை…!! பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!


இந்தியில் கங்கனா ரனாவத் நடித்து தேசிய விருது கிடைத்த ‘குயின்’ படத்தின் ரீமேக்கினை தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நீலகண்டா இயக்க தமன்னா, மஞ்சிமா மோகன் நடிக்கின்றனர்.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது பிரான்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமன்னாவுக்கும் இயக்குனர் நீலகண்டாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

காட்சிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதை ஏற்க மறுத்துவிட்டார். “முதலில் சொன்னபடி படப்பிடிப்பு நடந்தால் தொடர்ந்து நடிக்கிறேன்.


இல்லாவிட்டால் நான் வெளியேறுகிறேன்” என்று தமன்னா கூறியதுடன் படத்தில் நான் இருப்பதாஇயக்குனர் இருப்பதாஎன்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் படப்பிடிப்பு தடைபட்டது. பிரச்னை முற்றியநிலையில் முதலில் தமன்னா வெளியேறியதாக கூறப்பட்டது. தற்போது இயக்குனர் நீலகண்டா படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

குழப்பமான இந்த நிலைக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பதில் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி