சிம்புவுடன் மீண்டும் ஜோடி போடும் 39வயது நடிகை.. இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் சிம்பு சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி ஈஸ்வரன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் 2021 பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் படப்பிடிப்பில் சிம்பு இணைந்த புகைப்படங்கள் வெளியானது.

இந்நிலையில் சிம்பு அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம் கௌதம் மேனன் இயக்கத்தில் தான் தனது அடுத்த படத்தை நடிக்கவுள்ளாராம் சிம்பு.

மேலும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடிக்க போகிறாராம். 39 வயதாகியும் தமிழ் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ள நடிகை அனுஷ்கா இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் இருவரும் இணைந்து 2011ஆம் ஆண்டு வெளியான வானம் திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!