தீபாவளிக்கு வெளியாகும் புதுபடங்கள்! ரசிகர்களே கொண்டாட ரெடியா – லிஸ்ட் இதோ

இந்த 2020 தீபாவளிக்கு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா ஊடரங்கு, தியேட்டர் மூடல், படப்பிடிப்புகள் ரத்து ஆகியவற்றால் சினிமா வட்டாரம் கடந்த 8 மாத காலமாக முடங்கிவிட்டது.

50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் பெரிய படங்கள் ரிலீஸ் 2021 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று, நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் ஓடிடியில் தீபாவளி ஸ்பெஷலாக நவம்பர் 12 ல் வெளியாகிறது.

இந்நிலையில் சந்தோஷ் ஜெயக்குமார் நடித்துள்ள இரண்டாம் குத்து, சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத், சரிலேரு நீக்கெவரு தமிழ் டப்பிங், தட்றோம் தூக்குறோம், யோகி பாபு நடித்துள்ள நாங்க ரொம்ப பிசி ஆகிய படங்கள் தியேட்டர்களில் நவம்பர் 14 முதல் வெளியாகவுள்ளன.

Ludo

Chhalaang

SIR

Jingle Jangle

Aashram

Suraj Pe Mangal Bhari

The Life Ahead

SuperMan Red Son

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!