மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் முதல் பாகம் – விமர்சனம்

செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் ஒரு கணினியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கின்றனர். இதன் மூலம் பல செயல்கள் செய்யலாம் என்று நினைக்கும் போது அந்த செயற்கை கணினி தானாகவே யோசித்து பல விஷயங்களை செய்கிறது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அப்போது இந்த கணினி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை கட்டுப்படுத்தி வெடிக்கச் செய்கிறது. இதில், அந்த கணினியும், அதற்கான சாவியின் ஒரு பகுதியும் அந்தக் கப்பலுடன் ஆழ்கடலில் மூழ்கிவிடுகிறது. இந்த சாவி இரண்டு பாகங்களை கொண்டது. இந்த இரண்டு பாகங்களை இணைத்தால் ஒரு பெட்டி திறக்கப்படும் அதில் என்ன இருக்கிறது என்பது முக்கியமான நபர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதனால், இந்த சாவியை கண்டுபிடிக்கும் மிஷன் டாம் குரூஸிடம் கொடுக்கப்படுகிறது. இறுதியில் டாம் குரூஸ் அந்த சாவியை கண்டுபிடித்தாரா? இல்லையா? மிஷன் முடிவுக்கு வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.   டாம் குரூஸ் படத்திற்கு பெரும் பலமாக உள்ளார். இந்த வயதிலும் சாகசங்களில் கலக்கியிருக்கிறார். படத்தின் கிளைமேக்ஸில் வரும் பைக் சாகசம் நம்மை வாய்பிளக்க வைக்கிறது. இவரின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு கணினிகள் மெல்ல உலகத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நிலையில் அதையே பிரதானமாக வைத்து ஒரு தரமான ஆக்‌ஷன் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குயரி. ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் நொடிக்கு நொடி நம்மை பரபரப்பின் உச்சத்துக்கு கூட்டி செல்கிறார் இயக்குனர். முந்தைய பாகத்தை பார்க்கும் போது இந்த பாகம் சற்று குறைவான ஆர்வத்தையே கொடுத்துள்ளது. மொத்தத்தில் மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் முதல் பாகம் – அசத்தல்


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!