“வந்துட்டேன் வந்தியதேவன் மாமா”.. கார்த்தியை கலாய்த்த சந்தானம்

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் “ஆல் இன் ஆல் அழகு ராஜா”. இப்படத்தில் கார்த்தி, காஜல், பிரபு, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற காமெடி புகைப்படம் ஒன்றை நடிகர் கார்த்தி பகிர்ந்து “வாடி என் கரீனா சோப்ரா” என்று ஜாலியாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு நடிகர் சந்தானம் வந்துட்டேன் வந்தியதேவன் மாமா என்று கார்த்தியை ஜாலியாக கலாய்த்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!