புல்லரிக்கிறது..! செல்வராகவன் குறிப்பிட்ட பிரபலம் யார் தெரியுமா?

அஜித் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான ‘வாலி’ படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பின்னர் குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் கள்வனின் காதலி, வியாபாரி, நண்பன், மெர்சல், மாநாடு, டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொம்மை’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் ‘பொம்மை’ படத்தின் ஸ்னீப் பீக் வீடியோவை பதிவிட்டு, என்ன ஒரு நடிப்பு! புல்லரிக்கிறது என்று எஸ்.ஜே. சூர்யாவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்றுள்ளது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!