தென்னிந்திய மக்கள் இந்தி படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்- ஷாகித் கபூர்

பிரபல பாலிவுட் நடிகரான ஷாகித் கபூர், நடிகர் பங்கஜ் கபூர் மற்றும் நீலிமா அசீமின் மகனாவார். முதலில் படங்களில் பின்னணி நடன கலைஞராக பணியாற்றிய ஷாகித் கபூர் அதன்பின்னர், கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான ‘இஷ்க் விஷ்க்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

2013-ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ஷாகித் கபூர் நடித்த ‘ஆர். ராஜ்குமார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது 2015-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘தூங்காவனம்’திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட ‘ப்ளடி டாடி’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் இன்று (ஜூன் 9) ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.

இந்நிலையில், நடிகர் ஷாகித் கபூர் தென்னிந்திய மக்கள் இந்தி திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “தென்னிந்திய மக்கள் இந்தி திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பாலிவுட் ரசிகர்கள் பெரிய மனம் படைத்தவர்கள். அவர்கள் எப்படி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களை ரசிக்கிறார்களோ அதேபோல் தென்னிந்தியர்களும் ரசிக்க வேண்டும்” என்று கூறினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!