கர்ப்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்‌ஷன் வெளியிட்ட வீடியோ.. .!

பிரிட்டீஸ் நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ஐ, தெறி, எந்திரன் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

நீண்ட நாட்களாக கோடீஸ்வரர் ஜியார்ஜை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக எமி ஜாக்சன் தெரிவித்து, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை பிறந்த பிறகே திருமணம் என்று எமி ஜாக்சன் கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/BxZWhAplT-m/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

இதையொட்டி சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் எமி ஜாக்சன் ஜோடி பாஃப்தா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். அங்கு ரெட் கார்பெட்டில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.