பருத்திவீரன் பட புகழ் செவ்வாழை ராசு காலமானார்

கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான ‘பருத்திவீரன்’ படத்தில் ‘பொணந்தின்னி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் செவ்வாழை ராசு. அதன்பிறகு காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 70 வயதாகும் செவ்வாழை ராசுவின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செவ்வாழை ராசுவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!