சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 மீண்டும் தள்ளிப்போகிறது..!!!


தொழில்நுட்ப காரணங்களால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தான் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘2.0’ இந்தப்படம், ஜனவரி 25ஆம் தேதிவெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் திட்டமிட்டபடிமுடியாததால், ஜனவரியில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

எனவே, படத்தை ஏப்ரல் மாதம்வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், ஏப்ரல் மாதம் ரிலீஸாக இருந்தரஜினியின் இன்னொரு படமான ‘காலா’வின் ரிலீஸும் தள்ளிப் போகிறது.

அநேகமாக சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி புதன்கிழமை ‘காலா’ படம் ரிலீஸாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!